ஹப்புத்தளையில் மண்மேடு சரிந்ததில் இரு வீடுகளுக்கு சேதம்
Badulla
Weather
Landslide
By Sindu
பதுளை மாவட்டம், ஹப்புத்தளையில் தொடருந்து பாதைக்கு அருகில் மண்மேடு சரிந்ததில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக மண் மேடு சரிந்து விழுந்ததில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டிக்கு சேதம்
மேலும் குறித்த பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அப் பகுதியில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி