தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய மணிவண்ணன்

Sri Lankan Tamils Sri Lanka Manivannan General Election 2024
By Raghav Oct 20, 2024 06:16 AM GMT
Report

தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ எதுவும் செய்யாத தமிழ் அரசியல் வாதிகள் இன்றும் தேர்தலில் நிற்கின்றனர் என தமிழ் மக்கள் கூட்டணி முதன்மை வேட்பாளராக போட்டியிடும் வி. மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் (Jaffna Electoral District) போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்றையதினம் (19.10.2024) யாழில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த மணிவண்ணன், “பல்கலைக்கழக மாணவனாக 2010 ஆம் ஆண்டில் இருந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன்.

பொதுத் தேர்தல் : இலங்கைக்கு வரவுள்ள கண்காணிப்பு குழு

பொதுத் தேர்தல் : இலங்கைக்கு வரவுள்ள கண்காணிப்பு குழு

தேர்தலை புறக்கணித்தல்

பின்னர் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என கூறினார்கள். நாம் தேர்தலை புறக்கணித்தால் ராஜபக்சக்களின் ஆட்சி மீண்டும் வரும் என கூறினோம்.

தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய மணிவண்ணன் | V Manivannan Media Conference

அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் இருந்து அவர்களோடு கருத்து முரண்பாடு நிலவி வந்த நிலையில் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு அவர்களோடு இணைந்து செயற்பட முடியாது என நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம்.

அதுபோன்று, சர்வதேச விசாரணைகள் தேவை என வட மாகாண சபை முதலமைச்சராக இருந்த சி.வி விக்னேஸ்வரன் மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றியதை அடுத்து அவரை தமிழரசுக் கட்சி வெளியேற்றியது.

2024 பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்

2024 பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்

காலத்தின் கட்டாயம் 

அந்நிலையிலையே நாம் இருவரும் ஒன்றிணைய வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டது. நாம் தற்போது தமிழ் மக்கள் கூட்டணியாக பயணிக்கிறோம்.

தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய மணிவண்ணன் | V Manivannan Media Conference

எமது தேர்தல் பிரசாரங்களில் நாம் மற்றைய கட்சிகள் மீது சேறு வீசும் தேவை எமக்கு இல்லை. நாங்கள் என்ன செய்தோம், என சொல்லும் அளவுக்கு மக்களுக்கு நாங்கள் சேவை செய்துள்ளோம்.

அதனை முன்னிறுத்தியே எமது தேர்தல் பிரசாரங்கள் இருக்கும். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான சூழலை அடுத்து தென்னிலங்கையில் பழைய அரசியல்வாதிகளை தென்னிலங்கை மக்கள் ஓரம் கட்டி விட்டனர். அவர்களும் அரசியலில் இருந்தும் ஒதுங்கிக்கொண்டனர்.

அவசர அவசரமாக மகிந்த வெளியிட்ட அறிவிப்பு

அவசர அவசரமாக மகிந்த வெளியிட்ட அறிவிப்பு

தமிழ் அரசியல் வாதிகள் 

ஆனால், தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ எதுவும் செய்யாத தமிழ் அரசியல் வாதிகள் இன்றும் தேர்தலில் நிற்கின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய மணிவண்ணன் | V Manivannan Media Conference

அவர்களை தமிழ் மக்களும் ஓரம் கட்ட வேண்டும். தற்போதைய நிலையில் மக்களை ஏமாற்றாத ஒரு அணியாக தமிழ் மக்கள் கூட்டணியே உள்ளது. மற்றைய கட்சிகளில் போட்டியிடுபவர்கள் 10, 20 வருடங்களாக நாடாளுமன்றில் இருந்தும் எதுவும் செய்யாதவர்கள்.

நாங்கள் இளைஞர்களாக கடந்த காலத்தில் எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு பல சேவைகளை செய்துள்ளோம்.

சுமந்திரன் வைத்த செக்: சிறீதரனின் பதவிக்கு வந்த சிக்கல்

சுமந்திரன் வைத்த செக்: சிறீதரனின் பதவிக்கு வந்த சிக்கல்

கோட்டாபய ராஜபக்ச ஆட்சி

கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆட்சி காலத்தில் பயங்கரவாதி என என்னை கைது செய்தார்கள். நான் பயங்கரவாதியா? மாநகர சபையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என விரும்பிய நான் பயங்கரவாதியா. 

தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய மணிவண்ணன் | V Manivannan Media Conference

இப்படியெல்லாம் மாநகர சபை செயற்படலாம். மாநகர முதல்வரால் ஒருவரால் இப்படியெல்லாம் செய்ய முடியும் என செய்து காட்டினோம்.

அதேபோன்று எமக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினரால் இதெல்லாம் செய்ய முடியுமா? என நீங்கள் வியக்கும் அளவுக்கு செய்து காட்டுவோம். நீங்கள் விரும்பும் மாற்றம் எம் ஊடாக கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன்“ என தெரிவித்துள்ளார்.

சலுகைகள் வெட்டு : ஒன்றிணையும் முன்னாள் ஜனாதிபதிகள்

சலுகைகள் வெட்டு : ஒன்றிணையும் முன்னாள் ஜனாதிபதிகள்

நாடாளுமன்ற தேர்தலை நோக்கிய அநுரவின் நகர்வுகள்!

நாடாளுமன்ற தேர்தலை நோக்கிய அநுரவின் நகர்வுகள்!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011