கணக்காய்வு சேவையில் வெற்றிடங்கள் : பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்
Sri Lanka
Job Opportunity
Department Of Audit
By Sathangani
இலங்கையில் கணக்காய்வு சேவையில் 40% வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனால், சில விசேட கணக்காய்வு நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் W.A.C. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள்
எனவே அரச சேவையில் தற்போதுள்ள பட்டதாரிகளிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இதற்கான போட்டிப் பரீட்சை விரைவில் நடத்தப்பட்டு 465 வெற்றிடங்களுக்கான புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் W.A.C. விக்ரமரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி