கைக்குழந்தையுடன் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய பெண் எம்.பி
parliament
united kingdom
maternity period
By Sumithiran
தாய்மை அடைந்த பெண் எம்.பிக்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தொழிலாளர் கட்சியின் எம்பி. ஸ்டெல்லா கிரீசி தனது கைக்குழந்தையை மார்போடு அணைத்தபடி கோரிக்கையை முன்வைத்தார்.
பெண்களுக்கு விடுமுறைக் காலத்தை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது அமைதியுடன் இருந்த அந்தப் பெண்ணுக்கும் அவர் கைக்குழந்தைக்கும் பிரதிநிதிகள் சபையின் அவைத் தலைவர் ஜேக்கப் ரீஸ் மோக் பாராட்டு தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு கிரீஸி தாய்மை அடைந்த போது அவருக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்ட போதும் தொகுதிப் பணிகளை மட்டும் செய்ய அனுமதிக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் பேசவோ வாக்களிக்கவோ அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.