18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி! கிடைத்தது அனுமதி
Corona
Vaccine
Pfizer
SriLanka
Synoform
By Chanakyan
2021 செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் 18 வயதினை பூர்த்தி செய்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனை நோக்காக கொண்டு மேலும் ஒன்பது மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் மற்றும் 14 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி அளவுகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆகஸ்ட் 9ஆம் திகதி நிலவரப்படி, நாடு 19.49 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.
அவற்றுள் 11.26 மில்லியன் முதல் டோஸாகவும், 3.25 மில்லியன் இரண்டாவது டோஸாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி