கட்டைக்காட்டுடன் சேவையை நிறுத்தும் பேருந்துகள்: மக்கள் கடும் அவதி
வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் அரச பேருந்துகள் கட்டைக்காட்டுடன் சேவையை நிறுத்துவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் கேவில் வரை செல்லாமல் கட்டைக்காடுடன் சேவையை நிறுத்துவதால் கேவில், நித்தியவெட்டை மற்றும் வைத்தியசாலைக்கு செல்லும் மக்கள் உட்பட பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் சேவை
இதனடிப்படையில் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கடந்த வருடம் சேவையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் கேவில் வரை செல்லவேண்டுமென அறிவுறுத்தினார்.
இருப்பினும், ஒரு சில நாட்கள் பேருந்துகள் சேவையில் கேவில் வரை ஈடுபட்டு பின்பு இடை நிறுத்தி விட்டதாக கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளை கேவில்வரை செல்லுமாறு பணிக்கப்பட்டது.
இருப்பினும், உத்தரவை கடைப்பிடிக்காமல் ஒரு சில பேருந்துகள் மீண்டும் கட்டைக்காட்டுடன் தமது சேவையை இடை நிறுத்திக் கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 18 மணி நேரம் முன்