வட்டுக்கோட்டை - 50 எழுச்சி மாநாடு...! மட்டக்களப்பில் நடந்த பாடல் வெளியீடு
வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறவுள்ள வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பான பாடல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு நேற்று (07.06.2026 - ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது.
தாயகத்தின் சொல்லிசைப் பாடகர் ஒருவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலும் இந்தப்பாடல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.
வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வில், ஏற்பாட்டுக் குழுவின் இணைப்பாளர்களான அருட்திரு வேலன் சுவாமிகள் மற்றும் அருட்தந்தை க.ஜெகதாஸ், மூத்த ஜேசு சபைத் துறவி அருட்தந்தை ஜோசப் மேரி, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி செல்வராணி, ஊடகவியலாளரும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் க. சோபனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின்போது வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டிற்காக உருவாக்கப்பட்ட பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதுடன் அதற்கான நடன அரங்கேற்றமும் இடம்பெற்றது.
இந்தப் பாடலை தாயக சொல்லிசைப் பாடகர் சி.வி.லக்ஸ் (லக்ஸ்மன்) பாடியுள்ளார்.
பாடல் வெளியீட்டுடன் தொடர்புடைய உரைகளும் நிகழ்த்தப்பட்டதுடன் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 18 மணி நேரம் முன்