தலைவர் பிரபாகரன் மீதான பற்று - வைகோ நெகிழ்ச்சி
கலைஞரைப் போன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மீதும் பாசம் கொண்டிருந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நேற்று (14) மதுரை தெப்பக்குளத்தில் நடைபெற்ற மதிமுக கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ,
தலைவர் பிரபாகரன் மீதான பற்று

'' இதெல்லாம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாது. படகில் சென்று விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது , திமுகவிற்கும் வைகோவின் பிரபாகரனுடனான சந்திப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதனால் என்னை கட்டாயப்படுத்தி பிரபாகரன் மீளவும் தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அப்போது கலைஞருக்கு ஒரு கடிதம் ஒன்றையும் என்னிடம் அவர் கொடுத்து அனுப்பினார்.
கடிதத்தை கலைஞரிடம் கொடுத்த போது 'என்ன தான் பற்று இருந்தாலும் உயிரை வெறுத்து சென்றிருக்கக் கூடாது' என கலைஞர் என்னிடம் கூறியிருந்தார்.'' என அவா் மேலும் தெரிவித்தார்.