யாழ்.பல்கலையில் பெரும் கையாடல் - அதிகாரிகள், ஊழியர்கள் தொடர்பு!
யாழ். பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியில் பெரும் கையாடல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக களஞ்சிய சாலையில் இடம்பெற்ற இந்த பொருட் கையாடல் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழக பராமரிப்புக் கிளையின் களஞ்சியசாலையில் இருந்து மின் இணைப்பு சாதனங்கள் மற்றும் கட்டடப் பொருட்கள் நீண்ட காலமாகக் களவாடப்பட்டுள்ளன.
தொடர்பில் அதிகாரிகளும்

மிகக் குறுகிய காலத்தினுள் சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மின் இணைப்பு வயர்கள் கட்டுக்கட்டாகக் காணாமல் போயுள்ளது.
இதனை அறிந்து கொண்ட நிர்வாகம், இது குறித்து காவல்துறைக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பராமரிப்புக் கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரே இந்தக் கையாடலில் ஈடுபட்டார்கள் என மேலதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இருப்பினும் இது ஊழியர்கள் மீது பழியைப் போட்டு மூடி மறைக்க முயல்வதாக கூறப்படுகின்றது.
அவ் ஊழியர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் சிலரும் இக் கையாடலுடன் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதன் பின்னரே காவல்துறையினரின் உதவி நாடப்பட்டதாகவும், காவல்துறையினர் பல்வேறு தரப்பிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.