விபத்துக்குள்ளாகிய வாகனம்..! பெண் ஒருவர் உயிரிழப்பு: 6 பேர் படுகாயம்
விபத்து
கெப்பெட்டிபொல-பெலுன்கல பிரதேசத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக கெப்பெட்டிபொல காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தின் போது வாகனத்தில் பயணித்த 7 பேர் காயமடைந்து வெலிமடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் ரிதிகம பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நித்திரையாகிய வாகனத்தின் சாரதி
ஹகும்புர பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பிட்டிபொல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
