வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சி பெற்றது மாவீரர் தினம் (படங்கள்)
tamil
people
maveerar nal
vannivilankulam
By Kalaimathy
முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.
மாவீரர் மதிவாணனின் தந்தை தர்மகுலசிங்கம்(கிளியன்) பொதுச்சுடரினை ஏற்றி வைக்க, மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஈகைச்சுடரினை ஏற்றினர்.
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது.
துயிலுமில்ல வளாகத்தில் இருந்த காவல்துறையினர் அனைவரையும் அஞ்சலி செய்ய துயிலுமில்ல வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை.
நூற்றுக்கணக்கானோர் வீதியில் நின்றே அஞ்சலி செலுத்தினர். புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பதோடு, ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.





மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்