உச்ச நட்சத்திரம் யார்..! வாரிசு திரைப்பட விழாவால் தொடர் சர்ச்சை
தமிழக ஊடகங்களில் நடிகர்கள் குறித்த செய்திகளுக்கு தொடர்ந்தும் முன்னுரிமை வழங்கப்படும் நிலையில், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குப் பின்னர் புதிய புதிய சர்ச்சைகள் வெளிவந்தபடியுள்ளன.
தமிழகத்தில் எப்போதும் திரைத்துறையின் தாக்கம் மிக அதிகளவில் இருக்கும் நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒப்பனை இல்லாமல் நடிகர் விஜய் பங்கெடுத்தமை தொடர்பாக புதிய சர்ச்சைகள் தொடர்கின்றன.
நடிகர் விஜயின் தோற்றம்
அந்தவகையில் தற்போதுள்ள நிலையில் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் விமர்சனம் சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முன்னணி நடிகர்களாக விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் திரைபடங்கள் ஒன்றாக வெளியாக தயாராகியுள்ள நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் தோற்றம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எதிர்மறை விமர்சனத்தை வைத்துள்ளார்.
உச்ச நட்சத்திர உரிமை கோரல்
இதனையடுத்து அவரது பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந் தற்போது முன்னாள் உச்ச நட்சத்திரமாக மாறிவிட்டதாகவும் நடிகர் விஜய் தான் தற்போது உச்ச நட்சத்திரம் எனத்தெரிவித்த ஊடகர் பிஸ்மியும் ரஜினி ரசிகர்களால் அச்சுறுத்தபபட்டுள்ளார்.
அவரது பணியகத்திற்கு சென்ற ரஜினி ரசிகர்கர்கள் சிலர் அவருடன் கடுமையாக வாக்குவாதம் செய்த விடயமும் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
