திரைப்பட வசனத்தை வைத்து தோனிக்கு தயாராகிய புதிய காணொளி
ஐ.பி.எல் போட்டிகளில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனிக்காக சிஎஸ்கே நிர்வாகம் ஒரு காணொளியை தயார் செய்துள்ளது.
அண்மையில் வெளியான வாரிசு திரைப்படத்தின் 'டிரெய்லரின்' முதல் காணொளி வடிவில் உள்ள வசனங்களை வைத்து தோனிக்காக அணி நிர்வாகம் புதிய காணொளியை தயார் செய்த்துள்ளது.
இந்த காணொளியில் அமைந்த வசனங்கள் அவருக்கு பொருந்துவதாக ரசிகர்கள் பலர் கருத்துப்பதிவை மேற்கொண்டு வருகின்றனர்.
சிஎஸ்கே அணி
இந்திய அணியின் முன்னாள் தலைவரான தோனி சமீபமாக அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், ஐபிஎல்லில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
2008 முதல் தற்போது வரை சிஎஸ்கே அணியின் தலைவராக தோனியே இருந்து வருகிறார். இடையே சுரேஷ் ரெய்னா, ஜடேஜா போன்றோர் குறிப்பிட்ட காலம் தலைவராக இருந்திருந்தாலும், சிஎஸ்கே ரசிகர்கள் மனதில் நிரந்தர தலைவராக தோனியே காணப்படுகிறார் என கூறப்படுகிறது.
இந்த காணொளி தற்போது சமுக ஊடகங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
