அவிழும் முடிச்சுகள் : லொக்கு பெட்டி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்
கிளப் வசந்த (club wasantha) படுகொலை தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த லொகு பெட்டி பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிளப் வசந்த படுகொலையின் பிரதான சந்தேக நபரான "லொக்கு பெட்டி" (Loku Pattie) எனப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வா பெலாரூஸ் நாட்டில் இருந்து நேற்று (04.05.2025) குற்றத் தடுப்புப் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டடு நாட்டிற்கு அழைத்தது வரப்பட்டார்.
தற்போது லொகு பெட்டியிடம் மேல்மாகாண தெற்கு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.
லொகு பெட்டி
இதற்கிடையே கிளப் வசந்த படுகொலை தொடர்பில் லொக்கு பெட்டி பரபரப்பான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்யதாக தகவல் வெளியாகியுள்ளது.
“பாதாள உலகக் குழுத் தலைவர் மதூஷ் என அழைக்கப்பட்ட மாகந்துரே மதூஷ் இறந்ததின் பின்னர், அவரது பணத்தை கிளப் வசந்த வைத்திருந்தார்.
அதனை வழங்க மறுத்து காஞ்சிபாணி இம்ரானிற்கு அச்சுறுத்தல் வழங்கியதற்காகவே கிளப் வஸந்தவை கொலை செய்ததாக 'லொகு பெட்டி' தெரிவித்துள்ளார்.
இரண்டு எதிரிகள்
மேலும், யூடியுப் தளம் ஒன்றிக்கு 'கிளப் வசந்த' அளித்த செவ்வியில், தனக்கு இரண்டு எதிரிகள் இருந்ததாகவும், ஒருவர் இறந்துவிட்டதாகவும், மற்றவர் பயத்தில் நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இறந்தவர் மதூஷ் என்றும், நாட்டை விட்டு தப்பியவர் கஞ்சிபாணி இம்ரான் என்றும் லொகு பெட்டி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மதூஷின் பணம் 'கிளப் வசந்த'விடம் இருப்பதாக தெரிந்ததும், அந்த பணத்தை தன்னிடம் வழங்குமாறு கஞ்சிபாணி இம்ரான் கோரிய போது 'கிளப் வசந்த' அதனை நிராகரித்துள்ளார்.
இதனால், இம்ரான் கடும் கோபத்தில், வசந்தவை படுகொலை செய்யத் தீர்மானித்ததாகவும், இம்ரான் மற்றும் தாம் இணைந்து கொலை திட்டத்தை தயாரித்ததாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள லொகு பெட்டி என்றழைக்கப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 07வது ரெஜிமண்ட்டில் முன்னர் பணியாற்றிய ஒரு இராணுவ சிப்பாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
