யாழ். கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்தி குறித்து முக்கிய ஆலோசனை!
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கும் வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று (30-10-2026) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய 24 கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த முகாமையாளர்கள் உத்தி உத்தரவு கலந்து கொண்டனர்.
நிலுவையிலுள்ள நிதி
இதில் கூட்டுறவு சங்கங்களை எவ்வாறு அபிவிருத்தி செய்வது, அதற்கான நிதிகளை வழங்குதல் நிலுவையிலுள்ள நிதிகளை மீளப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு முன்னோக்கி நகர்த்துவதற்கான வேலை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இதன் போது கூட்டுறவு சங்கங்கள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் அமைச்சருடன் குறித்த சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தமது பிரச்சினைகளை தெரியப்படுத்தினர்.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் வசந்த சமரசங்க, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |