நீதி கிடைக்கும் வரை கலந்து கொள்ளமாட்டேன் - கோட்டாபயவுக்கு வாசுதேவ அனுப்பிய கடிதம்
letter
Vasudeva Nanayakkara
gotabaya
By Sumithiran
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார, அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதாக அமைச்சர் அரச தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதாக கடந்த வெள்ளிக்கிழமை கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் நானாயக்கார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி