யாழிலிருந்து வற்றாப்பளை ஆலயம் சென்று திரும்பிய பேருந்து விபத்து..! ஆறு பேர் படுகாயம்
யாழ்ப்பாணம் (jaffna) - பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்களின் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (21.5.2024) காலை பூநகரி பாலத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பேருந்தில் பயணித்த ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழில் பரிசோதனைக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் : தொழிற்சாலைக்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்கள்
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றுசேர்ந்து பேருந்து ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி வற்றாப்பளை கண்ணகி அம்மன் (Vattrāppalai Kannaki Amman Kōvil) ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் பூநகரி பாலம் தாண்டி வந்துகொண்டிருந்த போது பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி (Kilinochchi) வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பூநகரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |