வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துச் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது!
sri lanka
vavuniya
people
By Shalini
வவுனியா - ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியது.
குறித்த பேருந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி பூனநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
இதன்போது ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் வீதிக்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தின் போது பேருந்தில் 7 பேர் பயணம் செய்த நிலைநிலையில் எவருக்கும் காயங்கள் ஏற்பபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்