வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தியால் இளைஞருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை இடம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாகனத்தின் சாரதி படுகாயங்களிற்குள்ளாகியுள்ளார். சம்பவத்தில் மஸ்கலியா பகுதியை சேர்ந்த பிரவீன் வயது 21 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
விபத்துதொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.