வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபரீதம்!
accident
police
vavuniya
investigation
By Kalaimathy
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் டாட்டா ரக வாகனம் வீட்டின் மதிலில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது ஒருவர் காயமடைந்ததாக ஈரப்பெரியகுளம் காவல்துறை தெரிவித்தனர்.
அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சிறிய டாட்டா ரக வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் வாகன சாரதி காயமடைந்துள்ளதுடன், வாகனம் பலத்த சேதமடைந்ததுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்டதால் வீட்டின் மதில் உடைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

