வவுனியாவில் துவிச்சக்கர வண்டியில் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
By Sumithiran
வவுனியா(vavuniya) கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளம் பகுதியில் இன்று(2)மதியம் இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபருடன் மோதி விபத்து
யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த கன்ரர் ரக வாகனம் கொல்லர்புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கனகராயன்குளம் காவல்துறையினர் விசாரணை
சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த முத்து ராமலிங்கம் (வயது 61) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
விபத்து தொடர்பாக கனகராயன்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 12 மணி நேரம் முன்
