வடக்கில் முடக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!
corona
vavuniya
northern province
quarentine
By Kalaimathy
வவுனியா சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் இன்று மட்டும் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியா சகாயமாதாபுரத்தில் கொரோனா தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்றய தினம் குறித்த கிராமத்தில் முடக்கல் நிலை கடுமையாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிராமத்தில் வசிக்கும் மக்களிடம் நேற்றய தினம் சுகாதாரபிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுகளின் பிரகாரம் மேலும் 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதேவேளை வவுனியா சுந்தரபுரம், மகாறம்பைக்குளம், தெற்கிலுப்பைக்குளம், தோணிக்கல் போன்ற பகுதிகளில் 8 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இன்று மாத்திரம் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்