மாவீரர் நாளை முன்னிட்டு சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட எண்மருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!
மாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றம் 8 பேருக்கு தடை உத்தரவினை வழங்கியுள்ளது.
வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் தமது பிரிவில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை மாவீர் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கமைய வவுனியா நீதின்றம் குறித்த 8 பேருக்கு தடை உத்தரவினை வழங்கியுள்ளது.
அந்தவகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி அனந்தன், சிவமோகன், காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்கத்தினை சேர்ந்த கோ. ராஜ்குமார், கா.ஜெயவனிதா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், கஜேந்திரகுமார்(கயன்), சு.தவபாலசிங்கம், செ.அரவிந்தன் ஆகியோருக்கு குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த நபர்கள் வவுனியா காவல்துறை பிரிவில் எதிர்வரும் 20 ஆம் திகதியில் இருந்து 29 ஆம் திகதி வரை மாவீரர் நிகழ்வை அல்லது அதனுடன் தொடர்புடைய எந்த நிகழ்வுகளையும் மேற்கொள்ளாது நிறுத்துவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 12 மாதம் 6 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.