மர்மமாக உயிரிழந்த மாணவன்- தடயவியல் பொலிஸார் களத்தில்!
police
vavuniya
death
student
northern province
By Kalaimathy
வவுனியா தோணிக்கல் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் நேற்றைய தினம் இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். தூக்கத்திற்கு சென்ற மகனை இன்று காலை எழுப்புவதற்காக பெற்றோர் சென்ற நிலையில் மகனை காணவில்லை.
பின்னர் வீட்டின் வெளிப்பகுதியில் முகத்தில் காயங்களுடன் சடலமாக கிடப்பதனை கண்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் காலை வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தோணிக்கல், லக்சபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் வயது 15 என்ற விபுலானந்த கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி