வவுனியாவில் முதியவர் சடலமாக மீட்பு
case
vavuniya
death
By Vanan
வவுனியா ஈரற்பெரியகுளம் குளப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் ஈரப்பெரியகுளத்தில் மீன்பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து இன்று சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவரது உறவினர்கள் குளத்திற்குச் சென்று தேடியுள்ளனர். இதன்போது குளத்திற்குச் செல்லும் வீதியில் அவர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.
குறித்த சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த செல்வராசா (வயது - 61)என்ற முதியவரே சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற ஈரற்பெரியகுளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்