வவுனியாவில் வனத்துறை நடவடிக்கையால் விவசாயிகள் அச்சம்
வனவளத்திணைக்களத்தின் அண்மைய செயற்ப்பாடுகளால் விவசாயிகள் அச்சநிலையில் இருப்பதாக வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் எஸ்.பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “வனவளத்திணைக்களத்தால் எல்லையிடப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தாலும் வவுனியாவை பொறுத்தவரை அவ்வாறு எந்தகாணியும் விடுவிக்கப்படவில்லை என்றே கூறவேண்டும்.
பராமரிக்கப்படாத காணிகள்
அத்துடன் நீண்டகாலமாக பராமரிக்கப்படாத காணிகள் இனிமேல் மக்களுக்கு கிடைக்காது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் காடுகளாக இருக்கும் தமது காணிகளை துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், வனவளத்திணைக்களம் அந்த பணியை செய்ய தடை போடுகின்றது அவ்வாறு செய்பவர்களையும் கைது செய்கின்றது.
இந்த நிலை தொடர்ந்தால் எவ்வாறு மக்கள் தமது காணிகளை துப்புரவாக்குவது இதனால் விவசாயிகளும் மற்றும் மக்களும் அச்சநிலையில் உள்ளனர்.
சில காணி
இதற்கு ஒரு நீதியான முடிவினை அரசு வழங்க வேண்டும், சில காணிகளுக்குள் கிணறுகள் உள்ளது அவ்வாறான காணிகளையும் புணரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
30 வருடங்களாக இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்கு மீளத்திரும்பவில்லை, அவர்களது வீடுகளை மூடி காடுகள் வளர்ந்துள்ளதுடன் அந்த காணிகள் தொடர்பாக கிராம அலுவலர்கள் உறுதிப்படுத்தி கடிதம் வழங்கினாலும் வனவளத்திணைக்களம் அதனை ஏற்க மறுக்கின்றது.
பலர் காணிகளுக்கான அனுமதிபத்திரத்தையும் வைத்துள்ளனர் ஆனால் அது செல்லுபடியாகாது என்று கூறுகின்றனர்.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவே இதற்கு அரசாங்கம் நல்லதொரு தீர்வை வழங்கவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
