வவுனியாவில் போராட்டத்தில் குதித்த வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள்!
வவுனியாவில் வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பேரணி இன்று (23-11-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றிருந்தது.
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்
ஆசிரியர்களின் கோரிக்கை
இதையடுத்து, அங்கு அரச அதிபருக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
தமது நீண்டகால கோரிக்கையான சம்பள உயர்வை வலியுறுத்தியும் மற்றும் ஆசிரியர்களின்வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய கவனம் செலுத்தி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை பாடசாலைகளை நடாத்துவதற்கு தாங்கள் செல்லமாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு
பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் புத்தாண்டுக்குப் பிறகு புதிய தாக்குதல்கள்..! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை