முக கவசம் அணியுமாறு வலியுறுத்திய அதிகாரி மீது தாக்குதல்!
வவுனியா சாந்தசோலைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதாரபரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சுகாதாரபரிசோதகர் நேற்றய தினம் மாலை சாந்தசோலைப் பகுதியில் கடமை நிமித்தம் சென்றிருந்தார்.
இதன்போது முக கவசத்தை சீரான முறையில் அணியாமல் வீதியால் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அதனை சீராக அணியுமாறு சுகாதார பரிசோதகர் எச்சரித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த இளைஞர் சுகாதார பரிசோதகரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தின் போதே சுகாதார பரிசோதகர் காயமடைந்துள்ளதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அதிகாரியை தாக்கியதாக சந்தேகிக்கும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.