ஆரம்பமாகியது தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம்!
srilanka
vavuniya
alliance
meetings
By Vasanth
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30மணிக்கு ஆரம்பமாகியது.
கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன், சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், கே.சயந்தன், குருகுலராயா, சட்டத்தரணி வி.தவராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் ஜெனிவா அமர்வுகள் மற்றும் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

