வவுனியாவில் இன்றிரவு துயரம் - யாழ் வந்த வாகனத்துடன் மோதுண்டு முச்சக்கரவண்டி சாரதி பலி
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (01) இரவு 7.40 மணியளவில் கெப் ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
வவுனியா முச்சக்கரவண்டி தரிப்பிடத்தைச் சேர்ந்த 32 வயதுமதிக்கத்தக்க ரஐீவன் என்ற சாரதியே உயிரிழந்தவராவார்
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனமும் எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியும் தாண்டிக்குளம் இராணுவ சிற்றுண்டிசாலைக்கு அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகின.
விபத்துச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி முற்று முழுதாக சேதமடைந்துள்ளதுடன் கெப் ரக வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.