வவுனியா பல்கலை ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!
வவுனியா பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று இன்று(18.11)முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு (MCA) உள்ளிட்ட உரிமைகளை வலியுறுத்தி, பல வருடங்களாகப் பல அரசாங்கங்களின் காலத்திலும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. எனினும், தற்போதைய அரசாங்கமும் தங்களது கோரிக்கைகளை ஒருதலைப்பட்சமாக நிராகரித்துள்ளதாக சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ச்சியான அநீதிகள்
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமக்கான தீர்வுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அநீதியே இழைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், 20% வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக நேரக் கொடுப்பனவு விகிதமும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியான அநீதிகள் இழைக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்காலத்தில் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம்
இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமக்கான சரியான தீர்வுகள் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கவில்லையாயின், கூட்டுக்குழுவின் முடிவின்படி எதிர்காலத்தில் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிப்பகிர்வுப் போராட்டத்தில் வவுனியா பல்கலைக்கழகத்தின் நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஈடுபட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |