பெரும்பான்மையைத் தாண்டி 120 MLA-க்கள் ஆதரவு: ஆட்சியில் அமரும் விஜய் - அதிரும் அரசியல் களம்
🛑 புதிய இணைப்பு
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தனது நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் தவெக 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அதன் மொத்த பலம் 120 ஆக அதிகரித்துள்ளது.
| தமிழக வெற்றிக் கழகம் (TVK) | 107 |
| இந்திய தேசிய காங்கிரஸ் | 05 |
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) | 02 |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) | 02 |
| இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) | 02 |
| விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) | 02 |
| 120 |
தமிழக சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) மேல் தற்போது தவெக கூட்டணி பலம் பெற்றுள்ளதால் அக்கட்சியின் தலைவர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்புகள் உறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
🛑 இரண்டாம் இணைப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தவெக விற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்த உத்தியோகப்பூர்வ கடிதத்தை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் திருமாவளவன் கையளித்துள்ளார்.

🛑 முதலாம் இணைப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தங்கியுள்ள மீனம்பாக்கம் தனியார் விடுதிக்கு தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வருகை தந்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது.
இருப்பினும் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது.
தனது நிலைப்பாடு
இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் மூலம் த.வெ.க. 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது.

இதுதொடர்பாக திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மாலை நான்கு மணிக்கு அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருமாவளவன் தங்கியுள்ள மீனம்பாக்கம் தனியார் விடுதிக்கு தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வந்துள்ளார்.
விசிக ஆதரவு கடிதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஆதவ் அர்ஜுனா வந்திருக்கலாம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |