வெடுக்குநாறி மலையில் காவல்துறை அராஜகம் : நீதி கோரி யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட ஒடுக்குமுறை மற்றும் அடாவடிக் கைதுகள் தொடர்பான விசாரணை நாளை நீதிமன்றத்திற்கு செல்லும் நிலையில் நீதிகோரும் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன.
குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகம் நாளை வெடுக்குநாறி மலையில் தமிழர்களின் வழிபாட்டு உரிமையை மறுத்து சிறிலங்கா காவல்துறை மேற்கொண்ட ஒடுக்குமுறைகளுக்கு நீதி கோரி போராட்டமொன்றை நடத்தவுள்ளது.
சிங்கள -பௌத்தமயமாக்கத்தை உடன் நிறுத்துமாறு
தொல்லியல் போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள -பௌத்தமயமாக்கத்தையும் உடன் நிறுத்துமாறு வலியுறுத்தியும், வெடுக்குநாறி மலையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த போராட்டம் இன்று (19) யாழ் பல்கலைக்கழக முன்றலில் மதியம் 12 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 12 மணி நேரம் முன்