நெடுங்கேணியில் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு : வலுக்கும் வெடுக்குநாறி விவகாரம்
Tamils
Vavuniya
Sri Lankan Peoples
Velan Swamigal
By Dilakshan
நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்தி தினத்தன்று இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஆர்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, நெடுங்கேணி பகுதியில்உள்ள வர்த்தகநிலையங்கள் அனைத்தும் இன்று காலை முதல் பூட்டப்பட்டிருந்தது.
ஆர்பாட்டபேரணிக்கு ஆதரவு வழங்குவதற்காகவும், கைதுசெய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தி குறித்த கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
போராட்டம்
அதேவேளை, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட அநீதிக்கு எதிராக வட- கிழக்கு மக்களை அணி திரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த போராட்டம் நாளை (16) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக நடைபெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 10 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்