சுமந்திரன் வருகிறார்.. முக்கிய செய்தி வருகிறது.. முன் பக்கத்தை வெறுமையாக வையுங்கள்!!
வெடுக்குநாறிமலை விசாரணை நீதிமன்றுக்கு வந்தபோது தமிழரசுக் கட்சியின் குறிப்பிட்ட ஒரு தலைவருக்கு ‘முரசடிக்கும்’ ஒரு ஊடகத்தின் பிரதம ஆசிரியர் தனது ஆசிரியர்பீட சகாக்களுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தாராம்.
“..வழக்கை வாதாட சுமந்திரன் விரைந்து வந்துகொண்டிருக்கிறார்.. பரபரப்புச் செய்திக்காக முதல் பக்கத்தை வெறுமையாக வைத்திருங்கள்..” என்று கூறியிருந்தாராம்.
‘வெடுக்குநாறிமலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். சுமந்திரன் அதிரடி’ செய்திக்குத் தலைப்பும் வைத்து தயாராகக் காத்துக்கொண்டிருந்தது அந்த ஊடகம்.
ஆனால் அந்த ஊடகத்திடம் கூறப்பட்டபடி எந்த அதிசயமும் நடக்கவில்லை நீதிமன்றில்.
காவல்துறை மிகக் கவனமாகக் காய்களை நகர்த்தி வாதங்களை முன்வைத்திருந்ததாம்.
கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வெற்றிடத்தை நிறப்பி பத்திரிகையை வெளியிடவேண்டி இருந்ததாம் என்ற செய்தியை ஆசிரியர் பீடத்தினர் சிரித்துக்கொண்டு பரிமாறினார்கள்.