தம்புள்ளையில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்க தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கரிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மத்திய நிலையத்தில் கடந்த வாரம் பாரியளவில் அதிகரித்துக் காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள் தற்போது கணிசமாகக் குறைந்துள்ளன.
எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள், வணிகர்கள் பொருளாதார மையத்துக்குச் செல்லாததே விலை வீழ்ச்சி மற்றும் மொத்த விற்பனை இன்மைக்குக் காரணம் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ போஞ்சி இன்று 100 ரூபாவாக குறைந்துள்ள நிலையில் கரட் ரூபா110 ஆகவும், தக்காளி ரூபா 60 ஆகவும், பீட்ரூட் ரூபா 100 ஆகவும், லீக்ஸ் ரூபா 80 ஆகவும் விலை குறைவடைந்துள்ளன.
