இலங்கையில் அதிகரிக்கவுள்ள மரக்கறிகளின் விலை!
Kandy
Sri Lanka
Sri Lanka Food Crisis
By pavan
எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் குழு தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக விளைச்சல்கள் சேதமடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலை 40 முதல் 50 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஒரு கிலோகிராம் கரட் மொத்த விற்பனையின் கீழ் 260 ரூபா முதல் 290 ரூபா வரை விற்பனை செய்வதுடன் கோவா ஒரு கிலோகிராம் 230 ரூபா முதல் 260 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், லீக்ஸ் 130 ரூபாவிலிருந்து 170 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், மலைநாட்டு மரக்கறிகளின் விலை 60 முதல் 70 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் எனவும் அருண சாந்த ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி