பிரதான வீதியில் வாகன விபத்து : 9 மாதக் குழந்தைக்கு நேர்ந்த துயரம்
அக்கரைப்பற்று (Akkaraipattu) - பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
A-04 பிரதான வீதியில் தாண்டியடி பகுதியில் நேற்று (23) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்று திசையிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற கார் ஒன்று, வீதியில் சென்ற மாடு மீது மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
விபத்து நடந்த நேரத்தில் காரில் சாரதி, அவரது மனைவி மற்றும் குழந்தையும் இருந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த குழந்தை திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
இதன்போது அட்டாளைச்சேனை 05 ஐ வசிப்பிடமாகக் கொண்ட 9 மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் திருக்கோவில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
