வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்!
Sri Lankan political crisis
IMF Sri Lanka
World Economic Crisis
By pavan
ஐஎம்எப் இன் கடன் வழங்கப்பட்ட போதிலும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதி வழங்கபடவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய வங்கியின் ஆளுனர் மற்றும் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை வாகன இறக்குமதி செய்வதற்கான அனுமதி கிடைக்கவில்லையெனவும் குலதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வாகன இறக்குமதிக்கான தடை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் தளர்த்தப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாகனங்கள் இறக்குமதி
மூன்று வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமையால் பாவனையாளர்களும் வாகன இறக்குமதியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி