சுட்டுக்கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபை தலைவர் : புதிய தவிசாளர் நியமனம்
Local government Election
Gun Shooting
National People's Power - NPP
Lasantha Wickramasekara
By Sathangani
வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண (Chinthaka Hewapathirana) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பின் போதே குறித்த பிரதேச சபையின் தவிசாளராக அவர் தெரிவாகியுள்ளார்.
வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.
முன்னாள் தலைவர் சுட்டுக்கொலை
இதன்படி, ஒரு மேலதிக வாக்கினால் வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

வெலிகம பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய லசந்த விக்ரமசேகர கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி பிரதேச சபையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ அறையில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அப்பதவி வெற்றிடமாகக் காணப்பட்ட நிலையில் புதிய தவிசாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி