பிரபாகரனின் இருப்பு - காவித் துண்டாக மாறப்போகும் தமிழர் நிலம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் இருப்பு என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமாக வந்திருக்கிறது.
தலைவர் இருக்கிறார் என்றால் தனி ஈழம் தான் தீர்வு. அதை விட்டு விலக மாட்டார். அதற்காக அவரது பிள்ளைகளாக வளர்க்கப்பட்ட எத்தனையோ ஆயிரம் போராளிகள் விதைக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஏகலைவன்.
தமிழர்கள் மத்தியில் குழப்பம்
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் இவ்வாறு கூறிய அவர், கவிஞர் காசி ஆனந்தன் முழுக்க முழுக்க காவிகளை மட்டுமே வைத்து ஒரு மாநாடு நடத்திய விடயத்தை சுட்டிக்காட்டி, ஈழம் என்ற நாடு வழங்கப்பட்டால் இன்னொரு காவித் துண்டாக மலரும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
யுத்தம் முடிந்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் பழ. நெடுமாறன் வெளியிட்ட இந்தக் கருத்தானது தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை கொடுக்கக் கூடிய அளவிற்கு அல்லது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் அளவிற்கான விடயதானம் அந்த அறிக்கையில் இல்லை. இதனால் பாதிப்பு தான் அதிகம் என்பது என்னைப்போன்றவர்களது கணிப்பாக இருக்கிறது.
பல பல நெடுமாறன் இவ்வாறு கூறுவது இது நான்காவது தடவை. பாதிப்பு என்ற வகையில் நோக்கும் இடத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தீர்வை கொடுப்பதாக அன்று நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது” - என்றார்.
YOU MAY LIKE THIS
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்