திக்திக் நிமிடங்கள்: 8 நாட்களின் பின் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்
வெனிசுவேலாவில் இடிந்து விழுந்த வணிக வளாக அடித்தளத்தில் எட்டு நாட்களாக சிக்கியிருந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
உள்ளூர் மற்றும் சர்வதேச மீட்புக் குழுக்கள் இணைந்து 70 மணி நேரம் போராடி அவரை பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்தாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு எட்டு நாட்களுக்குப் பிறகு இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 40 வயதான அந்த வணிக வளாகத்தில் பாதுகாப்புக் காவலராகப் பணியாற்றி வந்தவருமான ஹெர்னான் கில் தற்போது “நல்ல நிலையில்” இருப்பதாக சிலியின் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
இருளில் ஒரு ஒளிக்கீற்று
அவரை மீட்க 70 மணி நேரம் ஆனது என்றும், அவர் மருத்துவ வசதிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் தீயணைப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"நல்லவேளையாக ஹெர்னானை ஆம்புலன்ஸில் ஏற்றியபோது அவரது நிலை சீராக இருந்தது" என்று மீட்புப் பணியில் உதவிய வெனிசுலா செஞ்சிலுவைச் சங்கத்தின் மருத்துவ உதவியாளர் லூயிஸ் ரோட்ரிக்ஸ் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்
அவரது மனைவி குஸ்பிமார் கொன்சாலஸ், மீட்புக் குழுவினர் தொடர்பு கொள்வதற்கு முன்பு பல நாட்கள் விரக்தியில் இருந்ததாகவும், ஆனால் "அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை அறிந்தபோது, அந்த இருளில் ஒரு ஒளிக்கீற்றைக் கண்டேன்" என்றும் கூறினார்.
இந்தத் தம்பதியருக்கு 8 மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மீட்புப் பணியாளர்களுக்கு நன்றி
வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வியாழக்கிழமை இந்த மீட்பு நடவடிக்கையைப் பாராட்டி “இன்று நாம் ஹெர்னான் கில்லின் வாழ்க்கையைக் கொண்டாடுகிறோம்.

இந்த மீட்புப் பணிக்காகத் தங்கள் உடலையும் நேரத்தையும் ஆன்மாவையும் அர்ப்பணித்த தேசிய மற்றும் சர்வதேச மீட்புப் பணியாளர்களுக்கு நன்றி” என்று கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்