நாட்டை விட்டு வெளியேறினார் வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர்
World
Venezuela
By Raghav
வெனிசுலாவின் (Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் எட்மண்டோ கோன்சாலஸ் (Edmundo González )நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் குறித்த முடிவுகளை எதிர்க்கட்சி ஏற்க மறுத்ததையடுத்து எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசியல் தஞ்சம்
இதனைத் தொடர்ந்து வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் எட்மண்டோ கோன்சாலஸ் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் ஸ்பெயினிடம் (Spain) அரசியல் தஞ்சம் கோரி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி