ஆட்டம் காட்டும் டிரம்ப் - அமெரிக்காவுக்கு வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி எச்சரிக்கை
வெனிசுலா இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை (Delcy Rodríguez) நியமித்து வெனிசுலா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெனிசுலா (Venezuela) மீது திடீர் தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்கா, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைச் சிறைப்பிடித்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளது.
நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைதுசெய்த பின்னர், நியூயோர்க்கிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
நிபந்தனையின்றி விடுதலை
இந்தச் சம்பவத்தையடுத்து வெனிசுலாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெனிசுலா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார்.
அங்கு அவர் உரையாற்றுகையில், "வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மட்டுமே. அவரை அமெரிக்கா உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும்.
எமது நாட்டு மக்களைப் பாதுகாக்க அனைத்துப் பாதுகாப்புப் படைகளையும் நாம் தயார் நிலையில் வைத்துள்ளோம்," எனத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |