போதையில் வந்த விசமிகளால் முள்ளியவளை பொதுச் சந்தை மீது தாக்குதல்!
முள்ளியவளை பொதுச் சந்தையின் வியாபாரிகள் மீது, விசமிகள் தாக்க்கியமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வியாபாரிகள் கடையடைப்பில் ஈடுப்பட்டுள்ளனர்
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள முள்ளியவளை பொது சந்தையில் அடையாளம் தெரியாத விசமிகள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (10) இரவு இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத விசமிகள் சிலர் பொதுச் சந்தையில் புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வியாபாரிகளிடம் இருந்த காய்கறிகள் மற்றும் சந்தை கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இரவுநேரக் காவலாளி சேவையில் இருக்கும் போது, வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று சந்தையின் கதவினை உடைத்து உள்ளே புகுந்து சந்தைக்குள் இருந்து மது அருந்த போவதாக காவலாளியுடன் முரண்பட்ட நிலையில் கையில் மதுபான போத்தல்களுடன் வந்த நபர்கள் சந்தை கட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி கடையடைப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
நேற்று (11) காலை காவல்துறையினர் வந்து விசாரணைகளை செய்யும் வரை சந்தை நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.