தாய்லாந்தில் ருசி கண்ட கருணா...!
Old fox எனப்படும் கிழநரிமூளை ஜே.ஆர் ஜெயவர்த்தானாவின் மருமகப்பிள்ளை ரணிலின் உயிராபத்து நாடகங்களுடனான உயர் சிகிச்சைகள் குறித்த கதைகள் இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பாக வெளிவரும் பின்னணியில் இவ்வாறன அரசியல் நரிகளுடன் ஒருகாலத்தில் கூட்டாளிகளாக இருந்தவர்களின் கதைகளும் காலம் கடந்து வெளிவருகின்றன.
அந்த வகையில் விடுதலைப்புலிகள் அமைப்பை பிளவு படுத்தும் கருணாவின் முதற்சுழியில் சமாதான காலத்தில் அவருக்கு தாய்லாந்து ருசி காட்டிய விடயம் முக்கியமாக இருந்த விடயத்தை இலங்கையின் முன்னாள் சமாதான அனுசரணை முகங்களில் ஒன்றான எரிக்சொல்ஹைம் சொல்லியுள்ளார்.
இது எத்தனையே வருடங்களுக்கு முன்னர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தனக்கேயுரிய எள்ளலுடன் தெரிவித்த விடயமென்றாலும் தாய்லாந்தில் பேச்சுவார்த்தைகளை வைத்தன் ஊடாக இவ்வாறான நாசகார பிளான் B திட்டங்களுக்கு ரணில் மேற்பார்த்த கொழும்பு அதிகார மையம் போட்ட திட்டங்கள் குறித்த செய்திகள் வரும் நிலையில் இந்த விடயங்களை தாங்கி வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சு....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |