ஜோ பைடன் தலைமையில் நடைபெறவுள்ள வெசாக் நிகழ்வுகள்
இந்த ஆண்டு நடைபெறும் பிரதான வெசாக் பண்டிகையை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் கொண்டாட அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வோஷிங்டன் டிசியில் உள்ள இலங்கை தூதரகம், வெள்ளை மாளிகையில் இந்த ஆண்டு வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஆயத்த கூட்டத்தை நடத்திய போது இது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
தூதுவர் சமரசிங்க இலங்கை மக்களுக்கு மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள சுமார் 500 மில்லியன் பௌத்தர்களுக்கும் வெசாக்கின் முழுமையான முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
வெசாக் நிகழ்வுகள்
மேலும், இந்த ஆண்டு வெசாக் விழாவை அமெரிக்க அதிபரின் அனுசரணையில் வெள்ளை மாளிகையில் நடத்த முடிந்தால் அது உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு ஒரு கௌரவமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
நேபாளம், இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா, மங்கோலியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் தூதரகங்களின் மூத்த பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்காவின் சர்வதேச பௌத்த சங்கத்தின் தலைவர் வாங்மோ டிக்சே ஆகியோர் தூதுவர் சமரசிங்கவின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் சர்வதேச புத்த சங்கம் மற்றும் வோஷிங்டன் டி.சி. சி தூதரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட இராஜதந்திர பிரதிநிதிகள் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |