கொழும்பில் திரைப்பட கலைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
கொழும்பு, அதுருகிரிய, பொரலுகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் இசைக்கலைஞர் விக்டர் ரத்நாயக்கவின் இளைய சகோதரரான ரத்நாயக்க ஆராச்சிலாகே டொன் பிரேமன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி பிற்பகல் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப் பகுதிய மக்கள் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர்
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் வீட்டிலிருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் மீட்கப்படுவதற்கு சுமார் இரண்டு நாட்களுக்கு முன்னரே அவர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இவர் ஒரு ஒளிப்பதிவாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், உயிரிழப்புக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அதுருகிரிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |