ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெளியான காணொளி: இறுதியில் தெரியவந்த பின்னணி
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என இந்தியாவில் (India) கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வர் தயாரித்ததாக வெளியான காணொளி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில் நால்வரும் சத்தியப்பிரமாணம் செய்ய பயன்படுத்திய கை மாறியுள்ளதாக காவல்துறையினர் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வழக்கமாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் வலது கை ஆள்காட்டி விரலை உயர்த்தி சத்தியம் செய்வார்கள், ஆனால் இந்த முறை இந்தியாவில் பிடிபட்டவர்கள் இடது கையை உயர்த்தி தவறாக காணொளி எடுத்துள்ளனர்.
அறிவிப்பு
இந்த நிலையில், வெளியான காணொளி போலியானது என காணொளி எடுத்த நபரிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், இது தீவிரவாதச் சம்பவம் இல்லை எனத் தெரியவந்துள்ள நிலையில், நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் என்பதால், இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுமாறு வெளிவிவகார அமைச்சர் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |