இலங்கை - ஈரானுக்கிடையில் புதிய ஒப்பந்தம்
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான கலாசார, சமய, விஞ்ஞான மற்றும் கைத்தொழில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பல வேலைத்திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்ர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஈரான் கலாசார நிலையத்தில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கும் ஈரான் கலாசார நிலையத்தின் கலாசார ஆலோசகர் மொஷாமி குதர்ஷிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மத ஒத்துழைப்பு

அக்கலந்துரையாடலில், தொல்லியல், ஆவணங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற கல்வித் துறைகளுக்கான கல்வித் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம், மத ஒத்துழைப்பை மேம்படுத்த புனித யாத்திரை பரிமாற்ற நிகழ்ச்சிகள், இரு நாடுகளிலும் உருவாக்கப்பட்ட திரைப்படக் கண்காட்சி விழாவை ஏற்பாடு செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 54 நிமிடங்கள் முன்